ADDED : ஜூலை 13, 2024 12:47 AM

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு புதுச்சேரி ராமலிங்கம், மங்களம் அம்மையார் நினைவு அறக்கட்டளையின் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி உதவிதலைமை ஆசிரியர் ஞானம் தலைமை தாங்கினார். பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ரத்தினவேல், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர்கள் பன்னீர்செல்வம், சுரேஷ்குமார் ஆகியோர் அரசு பொதுத்தேர்வில் பிளஸ் 2, பிளஸ்1, பத்தாம் வகுப்பில் சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கி சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.