/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
/
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஜூலை 13, 2024 12:46 AM
விருத்தாசலம்: வேப்பூர் அடுத்த நல்லுாரில், விருத்தாசலம் ரோட்டரி சங்கம் சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் ஊர்வலம் நடந்தது.
பாலாஜி மேல்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, ரோட்டரி சங்க தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் அன்புகுமரன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஷீலா வரவேற்றார். ரோட்டரி சங்கம் ஜாகிர் உசேன் வாழ்த்திப் பேசினார்.
சங்க செயலாளர் பரமசிவம், மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
விருத்தாசலம் ரோட்டரி சங்கம் அமிருதீன், சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில், பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மாணவர்கள் சென்றனர்.
சங்க பொருளாளர் பிரசன்னா நன்றி கூறினார்.