/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடலுார் வாரச்சந்தையில் ரூ.2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
/
வடலுார் வாரச்சந்தையில் ரூ.2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
வடலுார் வாரச்சந்தையில் ரூ.2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
வடலுார் வாரச்சந்தையில் ரூ.2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை
ADDED : ஜூன் 16, 2024 05:38 AM

வடலுார்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வடலுார் சந்தையில் நேற்று ரூ. 2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
வடலுாரில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச் சந்தையில் வாரச்சந்தை நடந்து வருகிறது. இச்சந்தையில் சுற்று வட்டார விவசாயிகள் தங்கள் ஆடு, மாடு, கோழிகளை விற்பனை செய்து வருகின்றனர்.
நாளை பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று நடந்த வாரச் சந்தையில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கினார்.
இதனால், ஒரு ஆடு ரூ.6,000 முதல் 45 ஆயிரம் வரை விலை போனது. நேற்றைய சந்தையில் ரூ.2.50 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.