/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு மருத்துவ குழுவினருக்கு பாராட்டு
/
அரசு மருத்துவ குழுவினருக்கு பாராட்டு
ADDED : ஜூன் 29, 2024 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும், குழுவினருக்கு கலெக்டர் பரிசளித்து பாராட்டினார்
குள்ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அதிக அளவில் பிரசவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளது. அதிக அளவில் பிரசவம் பார்க்கப்பட்டதற்கான பரிசை மருத்துவ அலுவலர் டாக்டர் ரேவதி மணிபாலன் மற்றும், குழுவினருக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கி பாராட்டி, கவுரவித்தார்.
டாக்டர் சுகன்யா, உதவி மகப்பேறு செவிலியர் வேம்பு, செவிலியர்கள் சிவரஞ்சனி, அருள்செல்வி, இலக்கியா ஆகியோருக்கும் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த சேத்தியாத்தோப்பு அரசு மருத்துவருக்கும் பரிசு அளிக்கப்பட்டது.