ADDED : ஜூலை 25, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அடுத்த பாஞ்சாலபுரத்தை சேர்ந்தவர் கவியரசு, 45; கூலி தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் 3000 ரூபாய் பணம் வாங்கியுள்ளார். அந்த பணத்தை முன்தினம் அவர் திருப்பி கேட்டதால், மாலையில் தருவதாக கவியரசு கூறியுள்ளார். இதையடுத்து, அவரது மனைவி வேல்விழி, 44; என்பவர், திருப்பாதிரிப்புலியூரில் நகையை அடமானம் வைத்துவிட்டு பணம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கவியரசு வீட்டில் துாக்குப்போட்டு இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்த புகாரின்பேரில், தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.