/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
/
மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
ADDED : ஜூலை 23, 2024 02:24 AM

கடலுார் : கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மாற்றுத்திறனாளிகள் புது வாழ்வு நலச்சங்கம் டிசம்பர் 3 இயக்க மாவட்ட தலைவர் சண்முகம் கொடுத்துள்ள மனு;
பி.டி.ஓ., அலுவலகம் மூலம் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் அனைத்து ஒன்றியத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை வழங்கி, 319 ரூபாய் ஊதியம் வழங்க
வேண்டும். ஒரு கால் பாதிப்பு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கும் மூன்று சக்கர வாகனம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீது ஒரு மாதத்திற்குள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.