/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
/
கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED : ஜூன் 29, 2024 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் உள்ள ஆனந்த கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.
அதனையொட்டி நேற்று, 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகம் செய்து கால பைரவருக்கு சங்காபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கோவில் வலம் வந்து அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.