/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குமராட்சி கடைவீதியில் கழிவறை கட்டடம்; ஊராட்சித் தலைவர் திறப்பு
/
குமராட்சி கடைவீதியில் கழிவறை கட்டடம்; ஊராட்சித் தலைவர் திறப்பு
குமராட்சி கடைவீதியில் கழிவறை கட்டடம்; ஊராட்சித் தலைவர் திறப்பு
குமராட்சி கடைவீதியில் கழிவறை கட்டடம்; ஊராட்சித் தலைவர் திறப்பு
ADDED : ஜூன் 29, 2024 05:59 AM

காட்டுமன்னார்கோவில் : குமராட்சி கடைவீதியில் புதிய கழிவறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.
குமராட்சி கடைவீதிக்கு தினமும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள், மாணவ, மாணவிகள் தங்களின் அன்றாட தேவைக்கு வந்து செல்கின்றனர்.
இங்கு இயற்கை உபாதை கழிக்க கழிவறை இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குமராட்சி வர்த்தக சங்கம் மற்றும் கிராம மக்கள், ஊராட்சித் தலைவர் தமிழ்வாணனிடம் கடைவீதியில் பொது கழிவறை கட்ட வேண்டுமென, கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கழிவறை கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று, நடந்தது. ஊராட்சித் தலைவர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் உமாமகேஸ்வரி, வர்த்தக சங்க செயலாளர் மணிவண்ணன், ஒருங்கிணைப்பாளர் அப்துல் பாசித், ஊராட்சி செயலாளர் சிலம்பரசன், வார்டு உறுப்பினர்கள் ராஜமலைய சிம்மன், மணிகண்டன், இளையராஜா, ராஜலட்சுமி மற்றும் இளஞ்செழியன், சக்தி, விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.