/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மூதாட்டியிடம் தாலி பறிப்பு; பெண்ணாடத்தில் துணிகரம்
/
மூதாட்டியிடம் தாலி பறிப்பு; பெண்ணாடத்தில் துணிகரம்
மூதாட்டியிடம் தாலி பறிப்பு; பெண்ணாடத்தில் துணிகரம்
மூதாட்டியிடம் தாலி பறிப்பு; பெண்ணாடத்தில் துணிகரம்
ADDED : ஜூலை 23, 2024 02:31 AM

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் தாலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்ணாடம் அடுத்த முருகன்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை மனைவி கொளஞ்சி, 65. இவர் நேற்று மாலை 4:00 மணியளவில் அப்பகுதியில் உள்ள வயலுக்கு சென்று விட்டு முருகன்குடி சாலை வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வெள்ளாறு மேம்பாலம் அருகே வந்தபோது, அவ்வழியே பைக்கில் ெஹல்மெட் அணிந்து வந்த மர்ம நபர், மூதாட்டியிடம் பெண்ணாடத்திற்கு எந்த வழியாக செல்ல வேண்டும் என கேட்டுள்ளார்.
அதற்கு வழி சொல்லிக்கொண்டிருக்கும் போது திடீரென மூதாட்டி அணிந்திருந்த தாலி செயினை பறிக்க முயன்றார். இதையறிந்த மூதாட்டி செயினை பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். ஆனால் 4 சவரன் தாலி செயினில் ஒன்றரை சவரனை மர்மநபர் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார்.தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை ஆய்வு செய்தனர். புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் மூதாட்டியிடம் தாலி பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.