/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முந்திரி விலை கிடுகிடு உயர்வு; கிலோவிற்கு ரூ.250 அதிகரிப்பு
/
முந்திரி விலை கிடுகிடு உயர்வு; கிலோவிற்கு ரூ.250 அதிகரிப்பு
முந்திரி விலை கிடுகிடு உயர்வு; கிலோவிற்கு ரூ.250 அதிகரிப்பு
முந்திரி விலை கிடுகிடு உயர்வு; கிலோவிற்கு ரூ.250 அதிகரிப்பு
ADDED : ஜூலை 23, 2024 02:37 AM
பண்ருட்டி : இந்திய அளவில் முந்திரி பருப்பு கிலோவிற்கு ரூ.250 வரை விலை உயர்ந்துள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா மற்றும் தமிழகம் முந்திரி உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் கடலுார், அரியலுார், புதுக்கோட்டை, தேனி, விழுப்புரம், சிவகங்கை மாவட்டங்களில் முந்திரி உற்பத்தியாகிறது. அதில், கடலுார் மாவட்டத்தில் 30 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் முந்திரி உற்பத்தியாகிறது.
இந்தாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் முந்திரி மரங்களில் பூக்கள் பூத்தபோது, கோடை மழை பெய்யாததால் பூக்கள் கருகியதால், முந்திரி உற்பத்தி 30 சதவீதம் குறைந்ததால், பொருளாதா ரீதியாக ஏற்படும் பாதிப்பை எண்ணி விவசாயிகள் கவலையடைந்தனர்.
இந்நிலையில், இந்தியாவிற்கு முந்திரி கொட்டை ஏற்றுமதி செய்யும் ஆப்பிரிக்கா, கானா, ஐவேரி உள்ளிட்ட நாடுகளிலும் உற்பத்தி குறைவால், இந்தியாவிற்கு வரத்து குறைந்தது.
இதனால், கடந்தாண்டு ரூ.8,500க்கு இறக்குமதி செய்யப்பட்ட 80 கிலோ முந்திரி கொட்டை மூட்டை இந்தாண்டு தரத்திற்கு ஏற்ப மூட்டைக்கு ரூ,2,000 முதல் 4,500 வரை விலை உயர்ந்துள்ளது. பண்ருட்டியில் கடந்தாண்டு ரூ.7,500க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை முந்திரி கொட்டை தற்போது ரூ.11 ஆயிரமாக விலை உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக தற்போது பதப்படுத்தப்பட்ட முந்திரிபயிர்கள் டபிள்யூ180 ரகம் கிலோ ரூ.1,100க்கும், 210 ரகம் ரூ.950; 240 ரகம் ரூ. 900; 320 ரகம் ரூ.830; டபிள்யூ 320 ரகம் ரூ. 780, எஸ்.டபிள்யூ 240 ரகம் ரூ.750; எஸ்.டபிள்யூ 320 ரகம் ரூ.700; டபிள்யூ 450 ரகம் ரூ.720. ஜெ.எச்.பத்தை ரூ.780; ஜெ.எச்.ரகம் (1எஸ்) ரூ.700, ஜெ.கே. ரகம் ரூ. 700, டபிள்யூ.பி. ரகம் ரூ.680; எல்.டபிள்யூ. பி ரகம் ரூ.680; எஸ்.டபிள்யூ. பி ரகம் ரூ570; பி.பி.ஏ. ரகம் ரூ.350, பி.பி. ரகம் ரூ.450க்கு விற்பனையாகிறது.
முந்திரிக்கு விலையில்லை என கடந்த 10ஆண்டாக விவசாயிகள் கூறிவந்த நிலையில் இந்தாண்டு முந்திரி கொட்டை மற்றும் பயிர் விலை உயர்வால் ஓரளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், இந்தியாவில் பண்டிகை காலம் இன்னும் துவங்கவில்லை.
பண்டிகை காலம் துவங்கும் முன்பே முந்திரி பருப்பு ரகங்களின் விலை உயர்ந்துள்ளது. பண்டிகை காலத்தில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது. இந்த விலை உயர்வு தீபாவளி பண்டிகைக்கு பிறகே குறைய வாய்ப்புள்ளது என்றார்.