/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மக்களின் தேவையை பூர்த்தி செய்வதே லட்சியம் துறையூர் ஊராட்சி தலைவர் பேட்டி

ADDED : ஜூலை 13, 2024 12:45 AM

பெண்ணாடம்: துறையூர் ஊராட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என ஊராட்சி தலைவர் அமுதா ராயதுரை தெரிவித்துள்ளார்.
பெண்ணாடம் அடுத்த துறையூர் ஊராட்சியில் நான் பொறுப்பேற்ற பின் ஊராட்சி நிதி, ஒன்றிய கவுன்சிலர் நிதி, ஒன்றிய பொது நிதி, மாவட்ட கவுன்சிலர் நிதி, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, முதலமைச்சரின் நிதி உட்பட அரசின் பல்வேறு திட்ட நிதியை பெற்று ஊராட்சியை மேம்படுத்தி வருகிறேன்.
அதன்படி, துறையூர் காலனியில் புதிய மேல்நிலை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. சுடுகாடு பகுதியில் போர்வெல் வசதி, எம்.எல்.ஏ., நிதியில் சாலை, பேவர் பிளாக் சாலை, சேவை மையம் கழிவறை புனரமைப்பு, நுாலகம் தினசரி திறப்பு, காலனி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது.
மெயின்ரோடு பகுதியில் மினிடேங்க், செந்துார் வடிவேலன் நகரில் புதிய போர்வெல், சாலை வசதி, மேட்டுத்தெருவில் புதிய மின்மோட்டார். புதிதாக அங்கன்வாடி மையம் கட்டடம், அரசு பள்ளிக்கு புதிய கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
துறையூர் ஊராட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடுவதே என் லட்சியம் என ஊராட்சி தலைவர் அமுதா ராயதுரை தெரிவித்தார்.