ADDED : ஜூலை 13, 2024 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: ஆத்மா திட்டத்தின் கீழ் சுந்தரவாண்டியில் ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைத்தல் மற்றும் ஊட்டசத்து மேலாண்மை பயிற்சி வகுப்பு நடந்தது.
ஊராட்சி தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் ஏழுமலை துவக்கி வைத்தார். மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் விவசாயிகளுக்கு அதிகளவு மானியத்துடன் வழங்கும் பசுந்தாள் பயிர் விதைகளை விதைத்து மண்ணை வளப்படுத்த வேண்டும்.
உயிர் உரங்கள் பயன்படுத்துவதால் ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைக்க வேண்டும். நுண்ணுயிர் பாசனம் மூலம் தண்ணீர் தேவையை குறைக்கலாம் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.
துணை இயக்குனர் செல்வம், உதவி பேராசிரியர் பொற்கொடி, உதவி இயக்குனர்கள் சுரேஷ், நடனசபாபதி, அலுவலர் மாலினி, தொழில்நுட்ப மேலாளர் வீராசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.