/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாலிபர் மீது தாக்குதல் மர்ம நபர்களுக்கு வலை
/
வாலிபர் மீது தாக்குதல் மர்ம நபர்களுக்கு வலை
ADDED : ஜூன் 14, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே வாலிபரை இரும்பு பைப்பால் தாக்கிய, மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த அருண்மொழிதேவன் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல். இவரது, மகன் சண்முகசுந்தரம், 29; இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள டீக்கடையில் இருந்தபோது மர்ம நபர்கள் நான்கு பேர் வந்து சண்முகசுந்தரத்தை இரும்பு பைப்பால் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில், படுகாயமடைந்த சண்முசுந்தரம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகிறார்.