/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி பஸ்நிலையத்தில் ரூ.5 கோடியில் நவீன வசதிகள்: சேர்மன் ராஜேந்திரன் தகவல்

ADDED : ஜூன் 14, 2024 06:35 AM

பண்ருட்டி: பண்ருட்டி பஸ் நிலையத்தில் ரூ. 5கோடி மதிப்பீட்டில் நவீனவசதிகளுடன் புதுப்பிக்கப்படும் என நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் வியாபாரிகள் கருத்துகேட்பு கூட்டத்தில் கூறினார்.
பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் பஸ் நிலைய வணிக வளாகங்கள் புதுப்பித்தல் குறித்து வியாபாரிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கமிஷனர் பிரீத்தி, நகராட்சி பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் கூறுகையில் ரூ. 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பஸ் நிலையத்தில் கடலுார் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள தகர ஷீட்கள் அகற்றப்பட்டு, ஆர்.சி.சி., கட்டடம் கட்டப்பட உள்ளன.
அப்பகுதியில் பஸ் பயணிகள் காத்திருக்க நிழற்குடை மற்றும் நவீன கழிப்பறைகள், புதிய போர்வெல் அமைத்து குடிநீர் வசதிகள் செய்து தரப்பட உள்ளன. போலீஸ் பாதுகாப்பு அறைகள் தனியாக அமைத்திடவும். பஸ் நிலைய வாயில் முன்பும்,பின்பும், கலைஞர் ஆர்ச் கேட் அமைத்திடவும் திட்டமிட்டப்பட்டுள்ளது.
பணிக்கு ஏதுவாக கடலுார் பஸ் நிலைய பகுதியில் உள்ள வியாபாரிகள் மாற்று இடத்தில் இருந்தால் 6 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு, தற்போது உள்ள வாடகைதாரர்களுக்கு ஒப்படைக்கப்படும் என்றார்.
இதற்கு வியாபாரிகள் தரப்பில் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தனர்.