/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குரங்குகள் அட்டகாசம் பொதுமக்கள் அச்சம்
/
குரங்குகள் அட்டகாசம் பொதுமக்கள் அச்சம்
ADDED : ஜூன் 16, 2024 06:10 AM
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், பொது மக்கள் தெருக்களில் நடந்து செல்ல அச்சமடைகின்றனர்.
பெண்ணாடம் பேரூராட்சியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள, கருங்குழி தோப்பு, கிழக்கு வாள்பட்டறை, வள்ளியம்மை நகர், மன்னார் நகர், சோழநகர், அம்பேத்கர் நகர், புத்தர் தெரு, சரோ ரத்தினபுரம் ஆகிய பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. கூட்டமாக வரும் குரங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து உணவுப் பொருட்களை திண்றும், அழித்தும் நாசம் செய்கின்றன.
மேலும், பள்ளி செல்லும் சிறுவர்கள் மற்றும் கடைகளிலிருந்து பொருட்களை வாங்கி வரும் பெண்களை அச்சுறுத்தி, கையில் எடுத்துச் செல்லும் பொருட்களை வலுக்கட்டாயமாக பிடுங்கிச் செல்கின்றன. இதனால் பெண்கள், சிறுவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, பெண்ணாடம் பகுதியில் அதிகரித்துள்ள குரங்குகளை பிடித்து, வனப் பகுதியில் விட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.