/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு
/
விருதை வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு
ADDED : ஜூன் 16, 2024 06:10 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியை புறக்கணித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அட்வகேட்ஸ் அசோசியேஷன் மற்றும் விருதை பார் அசோசியேஷன் நிர்வாகிகள் கூட்டுக் கூட்டம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.
விஜயகுமார், சுரேஷ், ரமேஷ், துணைத் தலைவர் புஷ்பதேவன், இணை செயலாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.
அதில், சைதாப்பேட்டை கோர்ட் வழக்கறிஞர் கவுதமனை சமூக விரோதிகள் படுகொலை செய்ததை கண்டித்தும், வரும் சட்டசபை, லோக்சபா கூட்டத்தொடரில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், நேற்று ஒரு நாள் நீதிமன்ற பணியை புறக்கணிப்பது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, நேற்று நீதிமன்ற பணியை புறக்கணித்து, நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.