ADDED : ஜூலை 13, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் ஆட்டோமொபைல் கடையில் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லிக்குப்பம், கீழ்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 40; மெயின் ரோட்டில் கஜா என்ற பெயரில் ஆட்டோமெபைல் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை கடையை திறந்த போது பொருட்கள் சிதறி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது கடையின் பின்புற கதவை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டயர்கள், பேட்டரிகள், 5,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.