ADDED : ஜூலை 13, 2024 12:29 AM
கடலுார்: கடலுாரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.65 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலுார் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் நேற்று மாலை புதுநகர் போலீஸ் ஸ்டேஷன் எதிரே வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் ரூ.65 லட்சம் ரொக்கம் இருந்ததை கண்டுபிடித்து, புதுநகர் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், சிதம்பரத்தை சேர்ந்த செந்தமிழ்செல்வன், சி.முட்லுார் நாராயணசாமி என்பதும், இருவரும், தனியார் ஏ.டி.எம்.,மில் பணத்தை நிரப்ப கொண்டு வந்ததும், வழக்கமாக பணம் கொண்டு வரப்படும் வேன் பழுது ஏற்பட்டதால் மாற்று ஏற்பாடாக பைக்கில் கொண்டு வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து ஆவணங்களை சமர்பித்த பின் அவர்களிடம் பணத்தை ஒப்படைத்தனர்.