/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநில சதுரங்க போட்டி வீனஸ் பள்ளி முதலிடம்
/
மாநில சதுரங்க போட்டி வீனஸ் பள்ளி முதலிடம்
ADDED : ஜூலை 25, 2024 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வீனஸ் பள்ளி மாணவி முதலிடம் பெற்று சாதித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், கடந்த 21ம் தேதி மாநில அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.
இதில் 9 வயதிற்குட்பட்ட பிரிவில், சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவி பிரகதா பங்கேற்று முதலிடம் பிடித்தார்.
வெற்றி பெற்ற மாணவியை வீனஸ் கல்விக் குழும நிறுவனர் மற்றும் தாளாளர் வீனஸ் குமார் பாராட்டி ஊக்கப்படுத்தினார், நிகழ்வில் பள்ளி முதல்வர் ரூபியால் ராணி, துணை முதல்வர் நரேந்திரன், நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ் போனிகலா மற்றும் உடற்கல்வி இயக்குநர் பிரபாகர், உடற்கல்வி ஆசிரியர்கள் உமா, ரஞ்சித் ஆகியோர் பங்கேற்றனர்.