ADDED : பிப் 01, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்: வடலூர் அருகே என்.எல்.சி., சுரங்க மண் கடத்திய 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வடலுார் சப் இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 3:00 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேட்டுக்குப்பம் தீஞ்சுவை நீரோடை அருகில் வந்த 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி ஆய்வு செய்ததில், உரிய அனுமதியின்றி என்.எல்.சி., சுரங்க மண் கடத்தி வந்தது தெரியவந்தது.
இது குறித்து வடலுார் போலீசார் வழக்கு பதிந்து, 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்ததுடன், டிரைவர்கள் சீராங்குப்பம் பஞ்சாட்சரம், 30; கீழ்பாதி தேவராஜ், 42; இருவரையும் கைது செய்தனர்.

