/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீடு புகுந்து நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
/
வீடு புகுந்து நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
ADDED : ஜன 17, 2024 08:36 AM

கடலுார் : வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார், கோண்டூரைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 31; இவர், குடும்பத்துடன் தெற்கு பூவாணிக்குப்பம் சென்று விட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 சவரன் நகை, ரூ. 18 ஆயிரம் பணம், ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசு திருடு போயிருந்தது. இதன் மதிப்பு 1.25 லட்சம் ரூபாய் ஆகும்.
புகாரின்பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

