/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் கடலில் குளித்த பள்ளி மாணவர் மாயம்
/
கடலுார் கடலில் குளித்த பள்ளி மாணவர் மாயம்
ADDED : ஜன 26, 2024 12:05 AM
கடலுார், : கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் கடலில் குளித்த கம்மாபுரம் பள்ளி மாணவர் அலையில் சிக்கி மாயமானர்.
விருத்தாசலம் அடுத்த கார்கூடல் கிராமத்தை சேர்ந்த சரவணன் மகன் சந்தோஷ்,16; கம்மாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்தார்.
நேற்று தைப்பூசம் பள்ளி விடுமுறை என்பதால் சந்தோஷ் தனது நண்பர்கள் 12 பேருடன் கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் கடற்கரைக்கு வந்தார்.
கடலில் குளிக்க கூடாது என போலீசார் எச்சரித்தனர். ஆனால், போலீசார் சென்றவுடன் பள்ளி மாணவர்கள் கடலில் குளித்தனர். அப்போது சந்தோஷ் ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டார்.
தகவலறிந்த தேவனாம்பட்டினம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீனவர்கள் உதவியுடன் சந்தோஷ் உடலை தேடி வருகின்றனர்.
இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

