/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
கடலுாரில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 01, 2024 11:54 PM

கடலுார்: பட்டியலின மாணவி மீது தாக்குதல் நடத்திய தி.மு.க., எம்.எல்.ஏ., குடும் பத்தின் மீது நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்து கடலுார் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் தாமோதரன், மீனவரணி தங்கமணி, எம்.ஜி.ஆர்., மன்ற சுப்பிரமணியன், ஜெ., பேரவை ஆறுமுகம், மாநில மருத்துவரணி சீனு வாசராஜா முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத்தலைவர் குமார் வரவேற்றார்.
மாநகர பகுதி கழக செயலாளர் மாதவன், பாலகிருஷ்ணன், வெங்கட்ராமன், கந்தன், வினோத்ராஜ், தொழிற்சங்க பாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, தமிழ்ச்செல்வன், நாகபூஷணம், சிவா, மாணவரணி செயலாளர் பாலகிருஷ்ணன், வர்த்தக பிரிவு செயலாளர் வரதராஜன், எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் தஷ்ணா, ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன், அழகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

