/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
/
சிதம்பரத்தில் அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 02, 2024 12:04 AM

சிதம்பரம்: பட்டியலின பெண்ணை கொடுமைப்படுத்திய, பல்லாவரம் தி.மு.க., எம்.எல்.ஏ., கருணாநிதி மகன் ஆண்ட்ரோ, மருமகள் மெர்லினா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிதம்பரம் காந்தி சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., அருள், மாவட்ட அவைத் தலைவர் குமார், ஜெ., பேரவை துணைச் செயலாளர் பாலமுருகன், மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், துணை செயலாளர்கள் தேன்மொழி, செல்வம், மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம், மாவட்ட பொருளாளர் சுந்தர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், நிர்வாகிகள் காணுார் பாலு, கோபி, ஒன்றிய செயலாளர்கள் அசோகன், பாலச்சந்திரன், சிவக்குமார், வாசு முருகையன், ஜோதி பிரகாஷ், நவநீதி கிருஷ்ணன், மாரிமுத்து, பூமாலை கேசவன், எம்.ஜி.ஆர். தாசன், தமிழரசன், முருகையன், லதா ஜெகஜீவன் ராம், கருப்பு ராஜா, மருதவாணன், மார்க்கெட் நாகராஜ், நகராட்சி கவுன்சிலர் சித்ரா, பன்னீர், செல்வம், ஜெயவேல், தேன்மொழி, செல்வம், வேணு புவனேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நகர துணை செயலாளர் அரிசக்தி நன்றி கூறினார்.

