
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த வாண்டையாம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் சகிலா ஆனந்தன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாலதி ராஜா முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிக்கள் நடந்தது. ஊராட்சி உறுப்பினர் வீரபாண்டியன், பள்ளி ஆசிரியர் ரேகா மற்றும் மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

