/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆண்டு விழா
/
மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆண்டு விழா
ADDED : பிப் 11, 2024 10:49 PM

நெய்வேலி: நெய்வேலி மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பள்ளி ஆண்டு விழாவிற்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
பள்ளியின் தாளாளர் ஜனார்த்தனன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன் வரவேற்றார்.
தமிழர்களின் கலாச்சாரத்தை கவுரவிக்கும் வகையில் பாரம்பரிய கலைகளான சிலம்பம், கபடி, பரத நாட்டியம், நாடகம் மற்றும் பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி பரிசு வழங்கி பாராட்டினார்.

