/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்
/
வேலை வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஜன 26, 2024 12:06 AM

சிதம்பரம் : காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் விழிப்புணர்வு பயிற்சி அளித்தார்.
காட்டுமன்னார்கோவில் அரசு கல்லுாரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக் கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஆறுமுக வெங்கடேஷ் தலைமையில், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் வெங்கடராஜன், இளநிலை உதவியாளர் அருண்ராஜ் ஆகியோர் பயிற்சி வகுப்பை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, தொழில் நெறி வழிகாட்டுதல் குறித் தும், மத்திய அரசின் 'அக்னிபாத் வாயு' பணி தொடர்பான, விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு முதல்வர் மீனா தலைமை தாங்கினார். கல்லுாரி வேலை வாய்ப்பு அலுவலர் சரவணன் வரவற்றார். கவுரவ விரைவுரையாளர் இளையராஜா நன்றி கூறினார்.
பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

