/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கரும்பு கொள்முதலில் 'புரோக்கர்கள்' ஆதிக்கம்
/
கரும்பு கொள்முதலில் 'புரோக்கர்கள்' ஆதிக்கம்
ADDED : ஜன 10, 2024 12:09 AM
தமிழக அரசு, பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்க அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில் விவசாயிகளிடம் அரசு அதிகாரிகள் மேற்பார்வையில், கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில், அரசு நிர்ணயித்ததை விட குறைந்த விலைக்கு புரோக்கர்கள் கரும்பை வாங்கினர். விவசாயிகளும் வேறு வழி இல்லாமல் இவர்களிடம் விற்று வந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், அதிகாரிகள் மேற்பார்வையில், விவசாயிகளிடம் நேரடியாக கரும்பை கொள்முதல் செய்ய அரசு உத்தரவிடடது. ஆனால் அவர்கள் பெயரளவுக்கு குறைந்த அளவே நேரடியாக கொள்முதல் செய்கின்றனர்.
இந்த ஆண்டு, அதிகாரிகளும் புரோக்கர்களும் சிண்டிகேட் அமைத்துள்ளதால், புரோக்கர்கள்ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
கரும்பு ஒன்றுக்கு தமிழக அரசு ரூ.33 விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், கடலுார் மாவட்டத்திற்குட்பட்ட குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, பத்திரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு ஒன்று ரூ.17க்கு புரோக்கர்கள் வாங்குகின்றனர். இதில் கரும்பு வெட்டுக்கூலி, ஏற்றுக்கூலி எல்லாம் அடக்கம். இது இல்லாமல், 10 கட்டு கரும்பிற்கு, 1 கட்டு கரும்பு இலவசம் வேறு. கஷ்டப்பட்டு கடன் வாங்கி கரும்பு பயிர் செய்து அதன் பலனை சம்பந்தமில்லாதவர்கள் அனுபவித்து வருவது தான் வேதனையாக உள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
எனவே, கரும்பு கொள்முதலில் புரோக்கர்கள் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

