ADDED : ஜன 17, 2024 02:59 AM

பரங்கிப்பேட்டை : கடலுார் மாவட்டத்தில், மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடிய நிலையில், மாட்டுப் பொங்கல் நேற்று, கொண்டாடப்பட்டது. மாட்டுப் பொங்கலன்று பெரும்பாலானோர் முன்னோர்களை நினைவு கூறும் வகையில், அசைவ உணவு படையலிடுவது வழக்கம். இதனை முன்னிட்டு கடலுார் துறைமுகத்தில் மீன்கள் வாங்க அதிகாலை முதலே மக்கள் திரண்டு, தங்களுக்கு தேவையான மீன்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இதனால், துறைமுகம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. அதேபோன்று, பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்தில், மீன் வாங்க, ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் குவிந்தனர். நேற்று மீன்கள் விலையும் அதிகமாக இருந்தது.
ஒரு கிலோ வஞ்சரம் 900 ரூபாய், கொடுவா 800, வவ்வால் 750, அயிலா 750, சங்கரா 350, இறால் கிலோ 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

