/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அயோத்தி செல்லும் பக்தர்கள் வழிபாடு
/
அயோத்தி செல்லும் பக்தர்கள் வழிபாடு
ADDED : பிப் 29, 2024 11:55 PM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் இருந்து அயோத்தி செல்லும் பக்தர்கள் கோவிலில் வழிபாடு செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு, சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. இக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக, வரும் 6ம் தேதி வரை நாடு முழுவதும் இருந்து தினமும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நெல்லிக்குப்பம் பா.ஜ., ஆன்மிக பிரிவு சார்பில் 25 பக்தர்களை அயோத்தி அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.
அவர்கள் நேற்று, கீழ்பட்டாம்பாக்கம் வீரபத்திர சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்துவிட்டு புறப்பட்டனர்.
ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் ராஜசேகரன், சேவாபாரதி செயலாளர் அம்சா பாஸ்கரன், ஊடக பிரிவு தலைவர் ஜனார்த்தனன், சுப்ரமணியன், கனகராஜ், கோகுல், ஜெகன், பாலாஜி, நிலவழகி ஆகியோர் வழியனுப்பினர்.

