ADDED : ஜன 17, 2024 02:13 AM

வடலுார் : வடலுாரில், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தூரிகை 2024ம் ஆண்டு காலண்டர் வெளியீட்டு விழா மற்றும் வங்கியின் வணிகம் ரூ.4000 கோடி உயர்ந்ததற்கான சிறப்பு விழா நடந்தது.
வள்ளலார் குருகுலம் மேல்நிலை பள்ளியில் நடந்த விழாவில், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திலீப்குமார் தலைமை தாங்கினார். பொது மேலாளர் இளங்கோ, இணைப்பதிவாளர் எழில்பாரதி முன்னிலை வகித்தனர். உதவி பொதுமேலாளர் பலராமன் வரவேற்றார். கலெக்டர் அருண் தம்புராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தூரிகை 2024ம் ஆண்டு காலண்டரை வெளியிட்டார். மேலும், சிறப்பாக செயல்பட்ட வங்கி கிளைகளுக்கு பாராட்டு தெரிவித்து, பரிசுகள் வழங்கினார். பின்னர் சமத்துவ பொங்கல் வைத்து, ஊழியர்களிடையே கோலப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
உதவி பொது மேலாளர்கள் அருள், மலர்விழி கலந்து கொண்டனர்.

