/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட கிரிக்கெட் போட்டி கடலுாரில் 13ல் துவக்கம்
/
மாவட்ட கிரிக்கெட் போட்டி கடலுாரில் 13ல் துவக்கம்
ADDED : ஜன 10, 2024 01:44 AM
கடலுார், : கடலுாரில் 'கிரிக்கெட் அசோசியேஷன் கோப்பை'க்கான விளையாட்டு போட்டிகள் வரும் 13ம் தேதி துவங்குகிறது.
கடலுார் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் கடலுார் மாவட்ட கிரிக்கெட் சங்க பதிவு அணிகளுக்கு இடையேயான 'கிரிக்கெட் அசோசியேஷன் கோப்பை' 2023-24ம் ஆண்டுக்கான கிரிக்கெட் போட்டி, வரும் 13ம் தேதி துவங்குகிறது. கடலுார் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் 20ம் தேதி வரை நடக்கிறது, போட்டியை கிரிக்கெட் சங்க தலைவர் வெங்கடேஷ் துவக்கி வைக்கிறார்.
போட்டியில் கடலுார், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 16 அணிகள் பங்கேற்கிறது. போட்டிகள் காலை 8:30 மணி, மாலை 2:30 மணி என நாள் ஒன்றுக்கு இரு போட்டிகள் நடக்கிறது.

