/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனியார் பஸ்களுக்கு அடிக்கிறதா 'யோகம்'
/
தனியார் பஸ்களுக்கு அடிக்கிறதா 'யோகம்'
ADDED : ஜன 10, 2024 12:09 AM
கடலுார் மாவட்டத்தில் பஸ் தொழிலாளர்களின் ஸ்டிரைக் தீவிரமடைந்துள்ள நிலையில், தொலைதுார ஊர்களுக்கு தனியார் பஸ்களை இயக்கினால், பெரும் தொகை கிடைக்கும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு ஏற்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் உட்பட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் சி.ஐ.டி.யூ.,- ஏ.ஐ.டி.யூ.சி., அண்ணா தொழிற்சங்கம் உட்பட 26 தொழிற்சங்கங்கள் நேற்று முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளது.
தொழிலாளர்களின் ஸ்டிரைக்கில் தி.மு.க.,வின் தோழமை கட்சிகள் இலைமறைவு காயாக ஈடுபட்டு வருகின்றன. இதனால் பல பகுதிகளுக்கு பஸ் சேவை நாளுக்கு நாள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட போது, போராட்டத்தை முறியடிக்க தனியார் பஸ்களை அரசு இயக்கியது.
இதே போன்று, தற்போது, தொலைதுார ஊர்களுக்கு தனியார் பஸ்களை இயக்கினால், பெரும் தொகை கிடைக்கும் என கடலுார் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

