/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அதிகாரிகளுக்குள் 'ஈகோ' பொங்கல் விழா 'கட்'
/
அதிகாரிகளுக்குள் 'ஈகோ' பொங்கல் விழா 'கட்'
ADDED : ஜன 17, 2024 02:19 AM
தமிழக முதல்வரின், மக்களுடன் முதல்வர் திட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் 3 நாட்கள் நடத்தப்பட்டது.
இதில், கமிஷனர் கிருஷ்ணராஜனுக்கு வேண்டிய அதிகாரிகள் மூலம் ஏற்பாடுகளை செய்ததால், பிற அதிகாரிகள் அந்த நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு பல லட்சம் செலவு செய்ததாக நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவர, மக்கள் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில், நெல்லிக்குப்பத்தில் கொண்டாடவில்லை.
இங்கு, அதிகாரிகளுக்குள் உள்ள 'ஈகோ' மற்றும் அதற்கான செலவு கணக்கு, நகர மன்ற கூட்டத்தில் மீண்டும் வெடிக்கும். ஏன் வம்பு என, கமிஷனர் தரப்பு, சமத்துவ பொங்கலை கொண்டாடாமல் ஒதுங்கி கொண்டதாக கூறப்படுகிறது.
ஆண்டிற்கு ஒருமுறை கொண்டாடும், சமத்துவ பொங்கலையே கொண்டாடாதது, மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

