/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் 43 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு
/
அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் 43 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு
அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் 43 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு
அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் 43 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு
ADDED : ஜன 27, 2024 06:21 AM

புவனகிரி : புவனகிரி அரசு பள்ளியில் 43 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
புவனகிரி அரசு மேல் நிலைப்பள்ளியில் கடந்த 1980-81ம் கல்வியாண்டில் 50 பேர் பத்தாம் வகுப்பு படித்து முடித்தனர். இவர்கள் தற்போது மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் துறைகளிலும், சிலர் தொழிலதிபர்களாகவும் பல்வேறு பகுதியில் வசிக்கின்றனர்.
இவர்கள் முன்னாள் மாணவர்கள் அமைப்பை துவக்கி சமூகத்தில் பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். முதல் முறையாக 43 ஆண்டுகளுக்குப்பின் சந்தித்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பு நிகழ்ச்சி புவனகிரியில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
கிரீடு தொண்டு நிறுவனர் டாக்டர் நடனசபாபதி தலைமை தாங்கினார். அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் உதயசூரியன் வரவேற்றார். புவனகிரி பேரூராட்சி கவுன்சிலர் அண்ணாஜோதி, தமிழ்ப் பேரவைச் செயலாளர் அன்பழகன், பாரதியார் வங்கி முன்னாள் இயக்குனர் துரை பாலச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் திருக்குறள் சுடர் ஜெயராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்திப் பேசினார்.
நிகழ்ச்சியில் 43 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்ததால், ஒருவரையொருவர் கட்டித்தழுவி பழைய நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்தனர். மேலும், தாங்கள் படித்த புவனகிரி அரசு மேல் நிலைப்பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்வது.
இயற்கை பேரிடர் உள்ளிட்ட பாதிப்புகளிலின் போது, பொது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துடன் நலிந்த குழந்தைகளுக்கு தேவையான கல்விச் சேவைகள், வாழ்வியல் உதவிகளை செய்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்ற உறுதியேற்றனர்.
உறுப்பினர் துரை முருகதாஸ் நன்றி கூறினார்.

