/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் ரூ.2.50 கோடியில் கட்டடம் திறப்பு
/
குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் ரூ.2.50 கோடியில் கட்டடம் திறப்பு
குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் ரூ.2.50 கோடியில் கட்டடம் திறப்பு
குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் ரூ.2.50 கோடியில் கட்டடம் திறப்பு
ADDED : ஜன 28, 2024 04:31 AM

நெய்வேலி, : என்.எல்.சி., சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் குறிஞ்சிப்பாடி பொது மருத்துவமனையில் 2.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது.
என்.எல்.சி., சமூக பொறுப்புணர்வு துறை நிதியின் பெரும்பகுதி பயன்படுத்தப்படுகிறது. அதன்படி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில், 2.50 கோடி ரூபாய் மதிப்பில், 11 ஆயிரத்து 900 சதுர அடி பரப்பளவில் 2 தளங்களுடன் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழாவிற்கு, அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி கட்டடத்தை திறந்து வைத்தார்.
கலெக்டர் அருண் தம்புராஜ், கூடுதல் கலெக்டர் சரண்யா, என்.எல்.சி., மனிதவளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப் முன்னிலை வகித்தனர். முதன்மை விருந்தினர் என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி பங்கேற்றார்.
விழாவில், கடலுார் மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார பணிகள் இணை இயக்குனர் மற்றும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் பங்கேற்றனர்.