/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல் கொள்முதல் நிலையம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
/
நெல் கொள்முதல் நிலையம் எம்.எல்.ஏ., திறந்து வைப்பு
ADDED : ஜன 26, 2024 12:15 AM

கடலுார் : கடலுார் அடுத்த துாக்கணாம்பாக்கம் ஊராட்சியில், 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சியில், அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். பி.டி.ஓ.,க்கள் சுதா, வீரமணி, துாக்கணாம்பாக்கம் ஊராட்சி தலைவர் ஏகவள்ளி காசிநாதன், துணைத் தலைவர் ராஜா முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி தலைவர்கள் முத்துக்குமரசாமி, பிரகாஷ், கனகராஜ், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருாள், முன்னாள் நிலவள வங்கி தலைவர் ராமலிங்கம், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஞானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து, துாக்கணாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் மாணவர்கள் உணவு அருந்தும் கட்டடத்தையும் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

