/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குழந்தைகளுக்கு அம்மை பரவல் அதிகரிப்பு
/
குழந்தைகளுக்கு அம்மை பரவல் அதிகரிப்பு
ADDED : பிப் 06, 2024 06:12 AM
திட்டக்குடி : திட்டக்குடி பகுதியில், வைரஸ் காய்ச்சல் பரவி பெரியவர்களை பாதித்து வந்த நிலையில், தற்போது, பொன்னுக்கு வீங்கி எனும் அம்மை குழந்தைகளுக்கு பரவி வருகிறது. இதனால் 10வயது வரையிலான குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குழந்தைகளின் இரண்டு கன்னங்களும் வீங்கி விடுவதால் குழந்தைகள் சாப்பிடுவதற்கு சிரமப்படுகின்றனர். ஏழு நாட்களுக்கு பாதிப்பு நீடிப்பதால், குழந்தைகள், பெற்றோர் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
திட்டக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறுகையில், தடுப்பூசி போட்ட குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வருவது குறைவு. இளநீர் போன்ற பானங்கள், திராட்சை, ஆரஞ்சு போன்ற புளிப்பு சுவையுள்ள பழங்கள் சாப்பிட்டால் பாதிப்பு குறையும். காற்றின் மூலம் பரவும் நோய் என்பதால், குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.