/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகைக்காக 2 பெண்கள் கொலை தொழிலாளிக்கு 'குண்டாஸ்'
/
நகைக்காக 2 பெண்கள் கொலை தொழிலாளிக்கு 'குண்டாஸ்'
ADDED : ஜன 21, 2024 04:07 AM

கடலுார்: குள்ளஞ்சாவடி அருகே நகைக்காக இரு பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கரும்பு வெட்டும் தொழிலாளி, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
குள்ளஞ்சாவடி அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி மனைவி இன்பவள்ளி, 53; இவர், கடந்த டிச., 22ம் தேதி நகைக்காக பொன்னங்குப்பம் கிராமத்தில் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து பண்ருட்டி அடுத்த பலாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகனான கரும்பு வெட்டும் தொழிலாளி திருமூர்த்தி,25; என்பவரை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். இவர், மீது குள்ளஞ்சாவடி போலீசில், ஏற்கனவே, நகைக்காக மற்றொரு பெண்ணை கொலை செய்த வழக்கும் உள்ளது. இவரின் தொடர் குற்ற செயலை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையை ஏற்று, திருமூர்த்தியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை சிறையில் உள்ள திருமூர்த்தியிடம் குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று வழங்கினர்.

