/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தை பூச தினத்தில் மது விற்பனை 'ஜோர்'
/
தை பூச தினத்தில் மது விற்பனை 'ஜோர்'
ADDED : ஜன 26, 2024 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : தை பூசமான நேற்று மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், பெண்ணா டம் பகுதியில் விற்பனை ஜோராக நடந்தது.
கடலுார் மாவட்டத்தில் தை பூச தினமான நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், 'தை பூசம்' விடுமுறை நாளான நேற்று பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளின் அருகே மதுபாட்டில்கள் விற்பனை கன ஜோராக நடந்தது.
இதனால் கடலுார், அரியலுார் மாவட்ட குடிமகன்கள் குஷியாக இருந்தனர்.
தை பூசம் தினமான நேற்று திறந்த வெளியில் மது விற்பனை செய்த சம்பவம் சமூக ஆர்வலர்கள், பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

