/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'மகளிர் சென்டிமெண்ட்' போலீஸ் ஸ்டேஷன்
/
'மகளிர் சென்டிமெண்ட்' போலீஸ் ஸ்டேஷன்
ADDED : ஜன 17, 2024 08:38 AM
சிதம்பரம் சப் டிவிஷனுக்குட்பட்ட புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் விபத்துக்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னை, கள்ளச்சாராய விற்பனை என, குற்ற சம்பவங்களுக்கு பஞ்சமில்லை.
இதனால், ஆண் இன்ஸ்பெக்டர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், 2018 ம் ஆண்டு அமுதா என்ற பெண் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டு பணிபுரிந்தார். அவருக்கு பிறகு, 2020 டிசம்பரில் கவிதா என்ற பெண் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டார். அவர், 2021 ஜூலையில், கடலுாருக்கு மாற்றப்பட்டதால், வினதா என்பவர், புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, போலீஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டதில், புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வினதா, வளத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில், விழுப்புரத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் சுஜாதா புதுச்சத்திரத்திற்கு நியமிக்கப்பட்டார்.
புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் தொடர்ந்து, 4வது முறையாக பெண் இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், அந்த இன்ஸ்பெக்டர்களின் பெயர்களும் அமுதா, கவிதா, வினதா, சுஜாதா என, பெயர்களும் 'சென்டிமெண்ட்' ஆக உள்ளது.

