ADDED : பிப் 29, 2024 11:53 PM

கடலுார்: மஞ்சக்குப்பம் சரவணபவ கூட்டுறவு பண்டக சாலை ரேஷன் கடையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மஞ்சக்குப்பம் சரவணபவ கூட்டுறவு பண்டக சாலை ரேஷன் கடைக்கு பொதுவிநியோக திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் மண்ணன்ணெய் அளவு குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. அதையடுத்து, கடலுார் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா நேற்று ரேஷன் கடைக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கடையில் இருந்த அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களின் தரம் குறித்து ஆய்வு செய்தார். ரேஷன் பொருள் வாங்க வந்த பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.
சூப்பர் மார்க்கெட் செயலாளர் வேல்முருகன், மண்ணெண்ணெய் வரத்து குறைவாக உள்ளதால், வழங்கும் அளவை பொறுத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பங்கீட்டு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
ஆய்வின்போது தி.மு.க., நகர செயலாளர் ராஜா, கவுன்சிலர் சுபாஷினி, மாவட்ட பிரதிநிதி சிவா உடனிருந்தனர்.

