/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பழங்குடி மக்களுக்கு மருத்துவ முகாம்
/
பழங்குடி மக்களுக்கு மருத்துவ முகாம்
ADDED : ஜன 26, 2024 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி : வழுதலம்பட்டு ஊராட்சியில் பழங்குடியின மக்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது
குள்ளஞ்சாவடி அடுத்த வழுதலம்பட்டு ஊராட்சியில் பழங்குடியின மக்களுக்கான மருத்துவ முகாம் மற்றும், அவர்களுக்கான வாழ்வாதார அடிப்படை தேவை குறித்த முகாம் நடந்தது. இதில் குள்ளஞ்சாவடி சுற்றுப் பகுதி பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.
அவர்களின் அடிப்படை வசதிகளான சாலை, மின்சாரம், மனைப்பட்டா, ஆதார் மற்றும், குடும்ப அட்டை, உழவர் அட்டை போன்றவற்றை பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
ஊரட்சி தலைவர் கலைச்செல்வி ராஜேந்திரன், துணைத் தலைவர் கிருஷ்ணராஜ், கிராம நிர்வாக அலுவலர் மதுரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

