/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பட்டா மாற்றம் நிராகரிப்பு செய்தால் புகார் தெரிவிக்க மொபைல் எண்
/
பட்டா மாற்றம் நிராகரிப்பு செய்தால் புகார் தெரிவிக்க மொபைல் எண்
பட்டா மாற்றம் நிராகரிப்பு செய்தால் புகார் தெரிவிக்க மொபைல் எண்
பட்டா மாற்றம் நிராகரிப்பு செய்தால் புகார் தெரிவிக்க மொபைல் எண்
ADDED : ஜன 27, 2024 06:15 AM
கடலுார் : இணையதளத்தில் நிராகரிக்கப்படும் பட்டா மாற்றம் கோரிய விண்ணப்பங்கள் குறித்து மொபைல் எண் மூலம் புகார் தெரிவிக்கலாம்.
கலெக்டர் அருண் தம்புராஜ் செய்திக்குறிப்பு:
பொதுமக்கள் பட்டா மாற்றம் செய்ய 'தமிழ் நிலம்' இணைய தளத்தில் மூலம் விண்ணப்பம் செய்பவர்களுக்கு பட்டா மாற்றம் செய்யும் முறை அரசு அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி கடலுார் மாவட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாற்றம் செய்ய உட்பிரிவு உள்ளவை மற்றும் முழுப்புலம் அளவை கோரி பொதுமக்கள் 'தமிழ் நிலம்' இணைய தளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர்.
இணையதள விண்ணப்பத்தை கையாளும் வருவாய்த் துறை சார்ந்த அதிகாரிகள் ஏதேனும் காரணம் காட்டி பட்டா மாற்றம் கோரி விண்ணப்பித்த மனுதாரர்களின் தகுதியுள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவ்வாறு, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு பாதிக்கப்படும் பொதுமக்கள் பயன்படும் வகையில் மாவட்ட நிர்வாகம் விண்ணப்பம் தொடர்பான புகார் தெரிவிக்க 9344690162 என்ற 'வாட்ஸ் ஆப்' மொபைல் எண்ணில் தெரிவிக்கலாம்.