/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய ரேஷன் கடை: எம்.எல்.ஏ., திறப்பு
/
புதிய ரேஷன் கடை: எம்.எல்.ஏ., திறப்பு
ADDED : பிப் 06, 2024 05:39 AM

கடலுார் : கடலுார் பாதிரிக்குப்பத்தில் புதிய ரேஷன் கடையை அய்யப்பன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 14 லட்சம் ரூபாய் செலவில், பாதிரிக்குப்பம் பங்காரு ராஜா நகரில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. ஊராட்சித் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுதா, வீரமணி, கூட்டுறவு சார் பதிவாளர்கள் வேலாயுதம், சரண்யா முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் அய்யப்பன் எம்.எல்.ஏ., புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார். விழாவில், ஓம் சரவணபவ ரியல் எஸ்டேட் சக்திவேல், திருவந்திபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.