/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி சென்னை மொபைல்ஸ் கடலுாரில் திறப்பு
/
தி சென்னை மொபைல்ஸ் கடலுாரில் திறப்பு
ADDED : ஜன 27, 2024 06:13 AM

கடலுார் : கடலுார் லாரன்ஸ்ரோடு அலமு மாளிகை வணிக வளாகத்தில் தி சென்னை மொபைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா நடந்தது.
அலமு மாளிகை வணிக வளாக உரிமையாளர், த.மா.கா., மாவட்ட பொதுச் செயலாளர் அலமு தங்கவேல், கடலுார் பார்லிமென்ட் தொகுதி முன்னாள் காங்., இளைஞரணி பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வி தங்கவேல் தலைமை தாங்கினர். தி சென்னை மொபைல்ஸ் உரிமையாளர் சம்சு அலி, இன்ஜினியர் கர்ணன், டாக்டர் ரமணன் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, புதிய ஷோரூமை திறந்து வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.பி., வெங்கடேசன், நீலா வெங்கடேசன் பங்கேற்றனர்.
விழாவில், மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா, ஏ.ஐ.டி.யூ.சி., முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகம், வாசவி மளிகை அழகப்பன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுகுமார், முன்னாள் ஊராட்சித் தலைவர் குமாரசாமி, ஓய்வு பெற்ற சிறை கண்காணிப்பாளர் குணசேகரன், சாம்பசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.
தி சென்னை மொபைல்ஸ் உரிமையாளர் சம்சு அலி கூறுகையில், 'தி சென்னை மொபைல்ஸ் 111வது கிளை கடலுாரில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு, அனைத்து நிறுவன மொபைல் போன், லேப்டாப், ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் வாட்ச், உதிரி பாகங்கள் குறைந்த விலையில் கிடைக்கும்' என்றார்.

