ADDED : ஜன 26, 2024 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பரதுாரில் ராஜகணபதி, துர்கையம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
கும்பாபிேஷக பூஜைகள் கடந்த 23ம் தேதி துவங்கி நடந்து வந்தது. நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு 2ம் கால யாக பூஜை, வஸோத்ராஹோமம், திரவியாஹூதி.ஸ்பரிசாஹூதி, நாடிசந்தானம், பிம்பசுத்தி, தத்துவார்ச்சனை, ரக்ஷாபந்தனம், மஹா பூர்ணாஹூதி நடந்தது. காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 10:15 மணிக்கு விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபி ேஷகம் நடந்தது. திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

