ADDED : ஜன 27, 2024 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 65 முதியவர் மீது போக்சோ வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
சிதம்பரம் அடுத்த மருதுாரைச் சேர்ந்தவர் மாயவன், 65; இவர், கடந்த 24ம் தேதி, 6 வயது சிறுமி யிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார், மாயவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

