/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலி சப்த விநாயகர் கோவிலில் பொங்கல் விழா
/
நெய்வேலி சப்த விநாயகர் கோவிலில் பொங்கல் விழா
ADDED : ஜன 17, 2024 02:24 AM

நெய்வேலி : நெய்வேலி சப்த விநாயகர் மற்றும் காஞ்சி பெரியவர் ஆலயத்தில் பொங்கல் விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே உள்ள அண்ணா கிராமத்தில் காஞ்சி சங்கர மடத்தின் பராமரிப்பில் சப்த விநாயகர் மற்றும் காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆலயம் உள்ளது. ஒரே இடத்தில் ஏழு விநாயகரை வணங்குவதற்கு, மகாலிங்கம் என்பவரால் 21 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. இந்த கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜைகள் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகமும் காஞ்சி பெரியவருக்கு மாதாந்திர அனுஷ நட்சத்திரத்திற்கு ஆவஹந்தி ஹோமம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. நேற்று பொங்கல் விழாவையொட்டி சப்த விநாயகர் மற்றும் மகா பெரியவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தன.

