/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆற்றுத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
/
ஆற்றுத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : ஜன 17, 2024 08:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், பெண்ணையாற்று திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கலை தொடர்ந்து வரும் 19ம் தேதி, ஆற்றுத் திருவிழா நடக்கிறது. இதனை முன்னிட்டு கடலுார் பெண்ணையாற்றில் கடலுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சாமிகள் எழுந்தருள செய்து, தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.
ஆற்றுத் திருவிழாவை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பெண்ணையாற்றில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நேற்று, ஜே.சி.பி., இயந்திரம் மூலம் துாய்மை பணி நடந்தது.

